சிறீலங்காவில் நேற்று மட்டும் 309பேருக்கு கொரோனா தொற்று!!

சிறீலங்காவில் நேற்று மட்டும் 309பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்றுக்குள்ளாகிய 309 பேர் நேற்று ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று பகல் 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மேலும், 259 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, நேற்றிரவு சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை, 309 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 188 பேர் பேலியகொட மீன் சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னர் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடைய 97 பேரும், கட்டுநாயக்கவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் 22 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 2 பேரும் நேற்று தொற்றுக்குள்ளானதாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மருத்துவ மனைகளில் உள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 2712 ஆக அதிகரித்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments