சிறீலங்காவில் 500ஜ தாண்டியது கொரோனா பாதிப்பு!

You are currently viewing சிறீலங்காவில் 500ஜ தாண்டியது கொரோனா பாதிப்பு!

இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே  சிறீலங்கா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் குறித்து நாளாந்தம் ஆய்வு நடாத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா வைரஸினை குறைத்து மதிப்பிட்டமை காரணமாக சில வைத்தியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கச தலைவர் அனுரத்த பாதனிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இன்றைய தினம் 5 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. IDH வைத்தியசாலையில் பணியாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள