சிறீலங்காவில் 726பேருக்கு தொற்று 8 பேர் மரணம்!

சிறீலங்காவில் 726பேருக்கு தொற்று 8 பேர் மரணம்!

கொவிட் 19 தொற்று காரணமாக நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில், 726 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 68,576 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில்  நேற்று கொரோனாவால் எண்மர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை

கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண், கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய பெண், கொட்டஹென பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண், கடவத்த பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண், மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண், களனி பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண், மஹரகம பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய பெண், முந்தல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள