சிறீலங்கா காவல்த்துறையின் அடாவடித்தனம் தொடர்கிறது!

சிறீலங்கா காவல்த்துறையின் அடாவடித்தனம் தொடர்கிறது!

கோட்டா அரசின் தமிழர்களுக்கான மேதினப் பரிசாக பருத்தித்துறைப் சிறீலங்கா காவல்த்துறையினரின் கொலை வெறித்தாக்குதலில் பெண்கள் வைத்தியசாலையில். அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தொழிலாளர் நாளாகிய இன்று யாழ் வடமராட்சியின் குடத்தனைப் பகுதியில் பெண்கள் தனித்திருந்த வேளையில் பருத்தித்துறை காவல்த்துறையினர் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடாத்தியுள்ளனர்.

தாக்கப்பட்ட பெண்களின் அலறல் சத்தம் கேட்டு உதவுவதற்காக ஓடிவந்த அயல் வீட்டு ஆண்கள் பெண்கள் மீதும் காடைத்தனமாகத் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் காயமடைந்தத பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயாரையும் சகோதரியையும் பார்வையிடுவதற்காகவும் உணவு மற்றம் உடைகளை வழங்குவதற்காகாகவும் வீட்டிலிருந்து வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு பெண்களை (இரண்டு வயதுப் பிள்ளையின் தாய் உட்பட) கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றுள்ள காவல்த்துறையினர் அவர்கள் மீது பொய்க் குற்றச் சாட்டுக்களை பதிவு செய்து அடைத்து வைத்துள்ளனர்.

அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் தரப்பில் சட்டத்தரணி சுகாஸ் சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னமபலம் ஆகியோர் காவல் நிலையம் சென்று அவர்களை பிணையில் விடுவிப்பதற்கு முயற்சி செய்தபோதும் பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஈவிரக்கமின்றி பிணை வழங்க மறுத்துள்ளார். அதன் காரணமாக இரண்டு வயதுப் பிள்ளையின் தாயும் அவரது சகோதரியும் காவல்த்துறை சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொறோனோ அனர்த்த ஊரங்குவேளையில் கோட்ட அரசின் காவல்த்துறையினர் பொது மக்கள் மீது வெறியாட்டம் நடாத்துகின்றனர். தமிழர்கள் மீது இனவெறியை வெளிப்படுத்துகின்றனர்.

காவல்த்துறையின் இந்த இனவெறிச் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சிறீலங்கா காவல்த்துறையின் இந்தக் காடைத்தனமான செயற்பாட்டினை புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments