இன்று (29) மாலை 6.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரத்தின் படி
இதுவரை, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






