சிறுமிமீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி சிறுவர்கள் இருவர் கைது!

சிறுமிமீது பாலியல் துஸ்பிரயோக முயற்சி சிறுவர்கள் இருவர் கைது!

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மேற்கு பகுதியில் 8 அகவை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சி செய்த பதின் அகவை சிறுவர்கள் இருவர் புதுக்குடியிருப்பு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
தொட்டியடி மேற்கு பகுதியில் ஆலய திருவிழா ஒன்றினை தொடர்ந்து சிறுவர் சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்த வேளை இரண்டு சிறுவர்கள் இணைந்து சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தினை கண்டவர்கள் பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 12 மற்றும் 14 அகவை  உடைய இரண்டு சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பத்தின் போது இரண்டு சிறுவர்களை கைதுசெய்த போது 14 அகவையுடை சிறுவனிடம் பெறுமதியான கையடக்க தொலைபேசி காணப்பட்டுள்ளது இதனை சோதனை செய்து பார்த்த பொலீசார் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குத்த தொலைபேசி இணைய இணைப்பிற்காகவே பாவனைக்க உட்படுத்தப்பட்டுள்ளதுடன் கூகில் தேடலில் பாலியல் தொடர்பான தோடல்களே அதிகளவில் தேடப்பட்டுள்ளமையும் வசாரணையின் போது தெரியவந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments