சிறுமி கடத்தல் – இரு இளைஞர்கள் கைது!

You are currently viewing சிறுமி கடத்தல் – இரு இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, சிறீலங்கா காவல்துறையினரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு சென்ற வேளை கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்குச் இது பற்றி முறைப்பாடு அளித்த போதும் சிறீலங்கா காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்தோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றனர்

அதனை அடுத்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ள யாழ்ப்பாண சிறீலங்கா காவல்துறையினர் சிறுமியின் உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் , சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்து யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments