சிறுவர்களையும் காணாமல் போக செய்த சிங்கள அரசு சிறுவர் தினம் துக்கதினம்!

சிறுவர்களையும் காணாமல் போக செய்த சிங்கள அரசு சிறுவர் தினம் துக்கதினம்!

சர்வதேச சிறுவர் தினத்தை துக்கதினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழையபேருந்துநிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்…

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்….

எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி மூன்றுவருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை.
நாளையதினம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளநிலையில் அதனை நாம் துக்கதினமாக அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் ஜனநாயக ரீதியான எமது போராட்டங்களுக்கு அரசினால் பல்வேறு அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்படுவதால் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவான நிலையில் காணப்படுகின்றது. எமது உறவுகளைதேடியே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை. எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றனர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே,தமிழ்க்குழந்தைகளும் பயங்கரவாதிகளா,பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே,அரசின் பொறுப்பற்ற பதில்களைகண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

பகிர்ந்துகொள்ள