சிறுவர் தினத்தில் காணாமல் போன சிறுவர்களை தேடி கவனயீர்ப்பு!

சிறுவர் தினத்தில் காணாமல் போன சிறுவர்களை தேடி கவனயீர்ப்பு!


சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இறுதிப்போரின் போது சிறுவர்களையும் காணாமல் செய்த இலங்கை அரசிடமும் சர்வதேசத்திடமும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டஉறவினர்களின் அலுவலகத்திற்கு முன்னால் வீதியில் தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.


போரின் இறுதி நாட்களில் பல சிறுவர்களும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் இன்றும் அந்த சிறுவர்கள் எங்கே என்று தெரியாத நிலை தொடர்ந்து வருகின்றது.


சர்வதேச சிறுவர் தினத்தில் சர்வதேசத்திடம் நீதிகோரி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments