சிறைகளில் வேகமாக பரவும் கொரோனா! : அரசுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி.

சிறைகளில் வேகமாக பரவும் கொரோனா! : அரசுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி.

சீன சிறைகளில் வேகமாக பரவும் கொரோனா வைரசால், அந்நாட்டு அரசுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெஜியாங் மாகாணத்தின் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஹுபெய் மாகாண சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள இளங்குற்றவாளி ஒருவருக்கும் வைரஸ் அறிகுறி காணப்படுகிறது.

இவ்வாறு வைரஸ் பாதிப்புக்கு உள்ளான கைதிகள் மற்றும் போலீசார் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு உள்ளனர். நோய் அறிகுறி காணப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறைகளில் கொரோனா வேகமாக பரவுவதை தொடர்ந்து வைரஸ் பாதிப்பில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் உகான் மகளிர் சிறை வார்டன், ஷாங்டாங் மாகாண நீதித்துறை தலைவர் ஜி வெய்ஜன், ஷிலிபெங் சிறை இயக்குனர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments