சிறைச்சாலையை நோக்கி சுட்ட மர்ப நபர் யார்?

You are currently viewing சிறைச்சாலையை நோக்கி சுட்ட மர்ப நபர் யார்?

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் போது விசேட அதிரடிப்படையின் தொப்பியை அணிந்து பொலிஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் சிறைச்சாலையின் பிரதான நுழைவாயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் யார், எதற்காக இவ்வாறு செயற்பட்டார், இதன் பிண்ணனி என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் விளக்கம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply