சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலீசார் பலி!

சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலீசார் பலி!

முல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15.10.2020) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
42 அகவையுடைய கேமந்த என்ற வீதிப்போக்குவரத்து பொலீசார் வீதியில் கடமையில் நின்று இரவு வேளை வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரத்தினை மறித்த போது வேக கட்டுப்பாட்டினை இழந்த உழவு இயந்திரம் பொலீசார் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது காயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை பொலீஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் உழவு இயந்திரத்தின் சாரதி முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்குறித்து விசாரணைகளை முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments