சீனாவில் உள்ள தமது கிளைகளை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!

சீனாவில் உள்ள தமது கிளைகளை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!

சீனாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகளை பிப்ரவரி 9ஆம் திகதி வரை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக,  சீனாவில் உள்ள தனது நிறுவனத்தின் அலுவலகங்கள், தொடர்பு மையங்கள்,விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை தனது நிறுவனத்தின் மையங்கள் மூடியிருக்கும் என்று ஆப்பிள் அறிவித்துள்ளது. சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்களது பணியாளர்களையும் சீனா செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

பாதிப்பு குறைந்த பின்னர் கிளைகள் முழுவதையும் சுத்தம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளது. இருப்பினும் வலைத்தள வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments