சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு!

You are currently viewing சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும் குறைந்து காணப்படும் நிலையில், அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் தளர்வு செய்துள்ளது உலக நாடுகள். இதனால் மக்கள் ஊரடங்கு பிடியிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் சீனாவில் கொரோனா பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அங்கு காய்ச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சில இடங்களில் மீண்டும் ஊரடங்கை கொண்டுவர உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர சியான் மற்றும் ஷாங்சி நகரில் தேவைப்படும்போது ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சீன மக்கள் மட்டுமல்லாமல் உலக நாட்டு மக்களும் தற்போது அச்சத்தில் உள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments