சீனாவில் பலி எண்ணிக்கை 2233 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

சீனாவில் பலி எண்ணிக்கை 2233 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2233 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. நேற்று கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில், மேலும் 115 பேர் ஹூபே மாகாணத்தில் இறந்துள்ளதுடன் சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2233 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை வைரசால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 75,000 ஐ தாண்டியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of