சீனாவில் பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

சீனாவில் பலி எண்ணிக்கை 2345 ஆக உயர்வு ; கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2236 லிருந்து 2345 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,465 லிருந்து 76,288 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 109 இறப்புகளும் மேலும் 397 தொற்றுக்களும் ஏற்பட்டுள்ள போதிலும், நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் இருந்து குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள