சீனாவுக்கு வெளியே முதல் மரணம் : கொரோனா

சீனாவுக்கு வெளியே முதல் மரணம் : கொரோனா

பிலிப்பைன்ஸில் 44 வயதான நபர் ஒருவர் நோர்வே நேரப்படி இன்று இரவு உயிரிழந்தார். இதுவே சீனாவுக்கு வெளியே பதிவான முதல் கொரோனா மரணம் ஆகும்.

பிலிப்பைன்ஸில் உள்ள உலக சுகாதார அமைப்பின்(WHO) கூற்றுப்படி, 44 வயதான இந்த நபர் சீனாவின் வுஹானில் இருந்து வந்தவராவார்.

காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டைப்புண் ஆகிய நோய்த்தொற்றின் அறிகுறிகளுடன் ஜனவரி 25 ஆம் திகதி குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் (AP).

முதலில் நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது . ஆனால் பிந்திய 24 மணி நேரத்தில் இந்த நிலை மோசமடைந்ததாக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

வுஹானைச் சேர்ந்த இந்த ஆணுடன் இருந்த 38 வயது பெண்ணும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவர் மணிலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைல் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுடன் இணைக்கக்கூடிய மற்றைய மரணங்கள் அனைத்தும் சீனாவில் நிகழ்ந்துள்ளன. அங்கு 304 பேர் இறந்துள்ளனர்.

ஆதாரம்: VG

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த