சீன கப்பலின் நடமாட்டத்தை கண்காணிக்கும் இந்திய கடற்படை!

You are currently viewing சீன கப்பலின் நடமாட்டத்தை கண்காணிக்கும் இந்திய கடற்படை!

இலங்கையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சீன கப்பலின் நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருப்பதாக இந்திய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லவுள்ள சீனாவின் ஆராய்ச்சி கப்பலின் நடமாட்டத்தை கண்காணித்துக்கொண்டிருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் சீன கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்காணிக்கின்றது

சீன கப்பல் ஆகஸ்ட் நடுப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடையும் என அறியமுடிகின்றது. எனினும் கப்பலின் அம்பாந்தோட்டை விஜயத்திற்கான சரியான நோக்கம் தெரியவரவில்லை.

இந்த கப்பல் எதற்காக செல்கின்றது என்பது தெரியவில்லை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான கப்பல்கள் சீனாவோ அல்லது வேறு எந்த நாடோ ஏவுகணை பரிசோதனையை மேற்கொள்ளும்வேளையே புறப்படத்தொடங்கும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர் இது போர்கப்பல் இல்லை,இவ்வாறான கப்பல்கள் முன்னரும் இந்த பகுதியில் நடமாடியுள்ளன நாங்கள் கண்காணித்துள்ளோம் என தெரிவித்துள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments