சீரற்ற வானிலை காரணமாக 159 பேர் பலி! 203 பேர் மாயம்!

You are currently viewing சீரற்ற வானிலை காரணமாக 159 பேர் பலி! 203 பேர் மாயம்!

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

203 பேரை  இதுவரை காணவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (29) இரவு 8.00 மணிக்கு மையம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, 25 மாவட்டங்களைச் சேர்ந்த 234,503 குடும்பங்களைச் சேர்ந்த 833,985 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 34,19 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் தற்போது 919 தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply