சுதந்திரபுரம் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு!

சுதந்திரபுரம் படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவு!

கடந்த 1998.06.10 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் உடையார்கட்டுப் பகுதியில் எறிகனணத்தாக் குதல்கள் மற்றும்.விமானத்தாக்குதலிலும் படுகொலைசெய்யப்பட்ட அப்பாவிப்பொது
மக்க ளின் 22ஆவது ஆண்டின் நினைவுநாள் நிகழ்வு வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில நாளை 10.06.2020 திங்கட்கிழமை காலை 9.00மணிக்கு சுதந்திரபுரம் சந்தி நிரோஜன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

1998ஆம் யூன் 10 ஆம் திகதி பொதுமக்கள் மீதான வெறியாட்டம் ஒன்றினை இலங்கை தரைப்படைகள் மற்றும் விமானப்படையினர் நிகழ்த்தியிருந்தனர் இலங்கை படையினரின் இரு பிரிவினரின் கூட்டுத்தாக்குதலில் இதில் 33 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர். 50ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலை காரணமாக சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments