சுமத்திரனின் சுத்துமாத்து அரசியல் என்ன?

You are currently viewing சுமத்திரனின் சுத்துமாத்து அரசியல் என்ன?

நல்லாட்சி காலத்தில் சுமந்திரன் உருவாக்கத்தில் கொண்டுவர இருந்த ஏக்கிய இராஜ்ய அரசியல் அமைப்பை எப்படியாவது நிறைவேற்றவே இந்த 6 கட்சிகள் கொண்ட கூட்டமைப்பு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியலும் பேராளிகளின் வகிபாகம் எனும் தலைப்பில் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அவர்,

“இன்றைய கால கட்டத்திலே நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்ன? இந்த மண்ணிலே மக்களுக்காக நடந்தேறியுள்ள தியாகங்கள் என்ன? இந்த தியாகங்கள் எதற்காக நடந்தது என்ற  ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இந்த இலங்கை நாட்டில் தமிழர்கள் கடந்த 78 வருடங்களாக அடிமைகளாக வழிநடத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த நாட்டிலே சட்டத்தை இயற்றுகின்ற நடாளுமன்றம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டிருக்கின்றது.

இந்த அரசியல் அமைப்புக்காலம் காலமாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் நேர்மையாக இருந்த சில சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அந்த அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன.

1972ஆம் அண்டு 78 ஆண்டு அரசியல் அமைப்புக்கள் எங்கள் விருப்பத்துக்கு மாறாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றும் அந்த அடிமைசாசனமான ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு தான் இந்த மண்ணிலே இவ்வளவு அழிவுகளும் தியாகங்களும் நடந்தேறுவதற்கு காரணமாக இருந்தது.

1987 யூலை 2ஆ ம் திகதி முன்னாள் மறைந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனவும் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஆசைக்கு மாறாக தங்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒப்பந்தத்தை நிறைவேற்றியதால் இன்று இவ்வளவு இழப்பை சந்திக்க வேண்டியிருந்தது” என குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply