சுமந்திரனின் பாதுகாப்பு படையினருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

சுமந்திரனின் பாதுகாப்பு படையினருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரதான வாக்கெண்ணும் நிலையமாக செயற்பட்ட யாழ்.மத்திய கல்லுாரிக்குள் நுழைந்து கட்சி ஆதரவாளர்கள் மீது அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 இரு முறைப்பாடுகள் அதிரடிப் படையினருக்கு எதிராகவும் ஒரு முறைப்பாடு பொலிஸாருக்கு எதிராகவும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொலிஸாரின் தாக்குதலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தவராசா துவாரகன், 

தன்னை பொலிஸார் சித்திரவதை செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு முறைபாடு பதிவு செய்துள்ளார்.

அதனையடுத்து, தவராசா துவாரகன் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ நிபுணரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 

யாழ்.பிராந்திய அலுவலகம் கோரியிருந்தது. இந்த நிலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி), முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி தனுபன் (இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்) ஆகியோரும் விசேட அதிரடிப் படையினருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments