சுமந்திரனிற்கு செருப்படி- இயக்குநர் மு.களஞ்சியம்

சுமந்திரனிற்கு செருப்படி- இயக்குநர் மு.களஞ்சியம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 8-ம் தேதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் truth with chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணலில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நான் ஏற்றதில்லை என்று விமர்சித்தார், அதோடு தான் சிங்களவர்களோடு கொழும்பில் வாழ்வது எனது பாக்கியம் என்றும் சொன்னார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை விமர்சித்துப் பேசச் சுமந்திரனுக்கு உரிமை இல்லை. வடக்கு கிழக்கு உட்படத் தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்களின் அகிம்சை வழி போராட்டத்தைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆயுதம் ஏந்தி போராடியது.

ஆயுத போராட்டம் தமிழ் மக்களுக்குள் திணிக்கப்பட்டது அல்ல. அந்தப் போராட்டம். தமிழ் மக்களுடன் இணைந்து பௌத்த, சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட ஆயுதப் போராட்டம். இது குறித்துப் பேச முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அருகதையில்லை. பௌத்த, சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்கள் மேல் அடக்கு முறையைக் கட்டவிழ்த்த போது அவருடைய ஐந்து வயதிலிருந்து, அதாவது ஐம்பது வருடங்கள் கொழும்பு சென்று வாழ்ந்து வந்த சுமந்திரனுக்கு, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த கொடூரங்களை அறியாத சுமந்திரனுக்கு ஆயுத போராட்டம் பற்றி என்ன தெரியும்?

சுமந்திரனின் கருத்தானது தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிய போராளிகள், போராடி தமது உயிர்களைக் காவியமாக்கிய மாவீரர்களையும், தமிழ் மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே கருதுகின்றோம்.

இவ்வாறாக விடுதலைப்புலிகளின் போராட்ட அரசியல் வழிமுறைகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட சுமந்திரனை வன்மையாகக் கணிக்கும் விதமாகவும் இனி எதிர்காலத்தில் இது போன்ற பேச்சுக்களைப் பேசக்கூடாது என எச்சரித்தும், ”தனி ஈழம் ஒன்றே தீர்வு” என்கிற வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மே-14 தேதி, எமது தமிழர் நலப் பேரியக்கத்தின் சார்பில் சுமந்திரனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, பெட்ரோல் ஊற்றி எரித்தோம்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments