சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு!

சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு!

சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி நேர்காணல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் சந்தித்து நேரில் முறைப்பாடு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரே நேற்று மாலை இரா.சம்பந்தனைச் சந்தித்து சுமந்திரன் விவகாரம் தொடர்பில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரனின் பேட்டி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளை எழுப்பி இருக்கின்றது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வரும் பொதுத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயம் நேர்ந்துள்ளது என்று மூவரும் சம்பந்தனிடம் சுட்டிக்காட்டினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்காவது சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து இடைநிறுத்தினால்தான் மக்கள் மத்தியில் இழந்த ஆதரவுத் தளத்தைத் தக்க வைக்கலாம் என ரெலோ செல்வம் வலியுறுத்தினார் எனவும் தெரியவந்திருக்கின்றது

பகிர்ந்துகொள்ள