சுயேட்சைகுழு வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

சுயேட்சைகுழு வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

யாழ்தேர்தல் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் வயது 58 என்ற நபரே இவ்வாறு இறந்துள்ளார்.

மாவீரர் குடும்பத்தை சேர்ந்த அவர் இனப்பற்றாளராக திகழ்ந்து பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்திருந்ததுடன், இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேட்சைகுழு 14 இல் இலக்கம் ஒன்றில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலிற்கான பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே அவர் இன்று காலை அவரது வீட்டில் மரடைப்பினால் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments