ஒஸ்லோ சுரங்க தொடரூந்து பாவனையாளர்களுக்கு வேண்டுகோள்!

ஒஸ்லோ சுரங்க தொடரூந்து பாவனையாளர்களுக்கு வேண்டுகோள்!

நோர்வேயின் மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து துறையாக இருக்கும், ஒஸ்லோவின் சுரங்க தொடரூந்து நிறுவனமான “Oslo T – Banen” தனது பாவனையாளர்களுக்கு வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.

வழமையாக, தொடரூந்தில் பணிப்பவர்கள், தாம் இறங்கவேண்டிய தரிப்பு நிலையம் வந்தவுடன், தொடரூந்தின் கதவுகளை திறப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் அழுத்திகளை அழுத்தியே கதவுகளை திறப்பது வழமை. எனினும், “கொரோனா” பரவலால் தற்போது நாட்டிலுள்ள அதீதமான நிலைமைகளால், அதிகமான தொடுகைகள் மூலம் “கொரோனா” தொற்று பயணிகளுக்கு தொற்றும் ஆபத்தை குறைப்பதற்காகவே இந்த வேண்டுகோளை தொடரூந்து நிறுவனம் விடுத்துள்ளது.

வழமைக்கு மாறாக அத்தனை தரிப்பு நிலையங்களிலும் சுரங்க தொடரூந்துகளின் அனைத்து கதவுகளும் திறக்கப்படுமெனவும், அதனால், பயணிகள் அனாவசியமாக கதவுகளிலுள்ள அழுத்திகளை கையால் தொடவேண்டாமென அறிவித்திருக்கும் நிறுவனம், இதன்மூலம் சுரங்க தொடரூந்துகளை செலுத்தும் சாரதிகளுக்கும், ஏனைய பயணிகளுக்கும் தொற்று ஏற்படும் அபாயத்தை கணிசமாக குறைக்கலாமெனவும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments