சுற்றுலாப் பயணிகளுக்காக, பூட்டிய கதவுகளை திறக்கவுள்ள கிரேக்கம்!

சுற்றுலாப் பயணிகளுக்காக, பூட்டிய கதவுகளை திறக்கவுள்ள கிரேக்கம்!

ஜூன் 15 முதல், நோர்வே மற்றும் பிற 28 நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கிரேக்கத்திற்கு (Hellas – Greece) பயணிக்கலாம். பயணிகள் ஏதென்ஸுக்கு (Aten) நேரடி விமானம் மூலமாகவோ அல்லது வடக்கு கிரேக்க நகரமான தெசலோனிகி (Thessaloniki) வழியாகவோ கிரேக்கத்திற்கு பயணிக்கலாம் என்று கிரேக்க சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட்டியலில் உள்ள நாடுகள் :
அல்பேனியா, ஆஸ்திரேலியா, பல்கேரியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, இஸ்ரேல், ஜப்பான், சீனா, குரோஷியா, சைப்ரஸ், லாட்வியா, லாட்வியா, லெபனான், மால்டா, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, வடக்கு மாசிடோனியா, நோர்வே, ருமேனியா, செர்பியா, ஸ்லோவாக்கியா , ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து, தென் கொரியா, செக் குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியா ஆகியவையாகும்.
ஜூலை 1 ஆம் திகதி பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்க்கப்படும்.

கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலேயே கிரேக்க அதிகாரிகள் நாட்டின் பெரும் பகுதிகளை மூடியிருந்தனர். கிரேக்கத்தில் இப்பொழுது, கொரோனா நோய்த்தொற்றால் 175 இறப்புகள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதுடன் இதுவரை 2,906 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரேக்க பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை 20 விழுக்காடாக உள்ளது, ஆகவே, நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் திறக்க நாட்டின் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: VG

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments