சுழிபுரம் பகுதியில் வாள் வெட்டு இருவர் பலி!

சுழிபுரம் பகுதியில் வாள் வெட்டு இருவர் பலி!

யாழ். சுழிபுரம் மத்தி, குடாக்கனைப் பகுதியில் இரவு இடம்பெற்ற மோதலில் இருவர் சாவடைந்துள்ளனர்.

இரு குடும்பங்களுக்கிடையிலான முரண்பாடு கைகலப்பாக மாறி இறுதியில் வாள்வெட்டில் முடிந்தது. இதன்காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் குடாக்கனையைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (வயது 53), இராசன் தேவராசா (வயது 32) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments