சுவிடனில் சிறிய ரக விமானம் விழுந்து நொருங்கி 9 பேர் பலி!

You are currently viewing சுவிடனில் சிறிய ரக விமானம் விழுந்து நொருங்கி 9 பேர் பலி!

சுவிடனில் சிறிய ரக விமானம் ஒன்று நேற்றிரவு விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்.

விபத்தில் பலியானவர்களில் விமானியைத் தவிர ஏனைய 8 பேரும் விமான சகாச நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வீரர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரேப்ரோ நகரில் உள்நாட்டு நேரப்படி இரவு 7.20 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஒரேப்ரோ நகரில் உள்ள விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே விழுந்து நொருங்கி தீப்பற்றி எரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments