சுவிட்சர்லாந்து மலையில் தேசியக்கொடி : “Matterhorn” மலையில் ஒளிர்ந்தது இந்திய தேசியக்கொடி!

சுவிட்சர்லாந்து மலையில்  தேசியக்கொடி : “Matterhorn”  மலையில் ஒளிர்ந்தது இந்திய தேசியக்கொடி!

கொரோனாவுக்கெதிராக உலகமே போராடி வரும் நிலையில், இந்தியாவுடன் தாங்களும் இணைந்து போராடுவதை உலகுக்கு காட்டும் வகையில், சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸில் (Alps) அமைந்துள்ள மலைசிகரத்தில் இந்திய தேசியக்கொடி ஒளிரச்செய்யப்பட்டுள்ளது.

அனைத்து இந்தியர்களுக்கும் நம்பிக்கையையும் வலிமையையும் அளிப்பதை உணர்த்துவதற்கு அடையாளமாக, சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹார்ன் (Matterhorn) மலையில் இந்தியாவின் மூவர்ணக்கொடி ஒளிரச்செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் ஒளிக்கலைஞரான “Gerry Hofstetter” இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் நடுவில் அமைந்துள்ள 4,478 மீட்டர் பரப்புள்ள மலைச்சிகரத்தில், பல்வேறு நாடுகளின் கொடிகளை ஒளிரச் செய்து அனைத்து நாடுகளுக்கும் நம்பிக்கையூட்டும் செய்தியை தெரிவித்து, கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கு சுவிட்சர்லாந்தின் ஆதரவைத் தெரிவித்துவருகிறார்.

இந்தியாவையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் நாங்களும் நிற்கிறோம் என்பதைக் காட்டுவதற்காகவும், இந்தியர்களுக்கு நம்பிக்கையளிப்பதற்காகவும், இந்திய தேசியக்கொடி மேட்டர்ஹார்ன் (Matterhorn) மலைச்சிகரத்தில் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது என சுவிஸ் சுற்றுலா அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மூவர்ணத்துடன் கூடிய மலையின் புகைப்படங்களை ஜெனீவாவை தளமாகக் கொண்ட இந்திய வெளியுறவு சேவை அதிகாரி குர்லீன் கவுர் பகிர்ந்துள்ளார்.

சுவிட்சர்லாந்திலுள்ள இந்திய தூதரகமும், கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் இந்தியர்களுடன் நாங்களும் நிற்கிறோம் என்பதைக் காட்டும் வகையில், 1000 மீட்டருக்கும் அதிகமான பரப்பில் இந்திய மூவர்ணக்கொடி மேட்டர்ஹார்ன் மலையில் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள