சுவிஸ் இராணுவ மருத்துவச் சங்கத்தின் துணைத்தலைவராக ஈழத்தமிழர் நியமனம்!

You are currently viewing சுவிஸ் இராணுவ மருத்துவச் சங்கத்தின் துணைத்தலைவராக ஈழத்தமிழர் நியமனம்!

இராணுவத் தலைமையுடன் முக்கிய சந்திப்பு

சுவிஸ் இராணுவத்தின் மிக முக்கியமான அங்கமான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்னணியைக் கொண்ட லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiraam Chandrelegar) நியமிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் சுவிற்சர்லாந்தின் இத்தகைய உயர்மட்ட இராணுவப் பொறுப்புக்குத் தெரிவாகியுள்ளமை உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, சுவிற்சர்லாந்தின் சுக் (Zug) நகரில் அந்நாட்டு இராணுவத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று வெற்றிகரமாக இடம்பெற்றது.

கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட ASMD அமைப்பின் சார்பில், அதன் புதிய தலைவர் லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் (Lt. David M. V. Kremer) மற்றும் துணைத்தலைவர் லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் ஆகியோர் முதல்முறையாக இராணுவத் தலைமையுடன் உத்தியோகபூர்வக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

முக்கியக் கலந்துரையாடல்கள்

இந்த முக்கிய நிகழ்வில் பின்வரும் உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்:

• மார்ட்டின் பிஃபிஸ்டர் (Martin Pfister) – சுவிஸ் கூட்டாட்சி கவுன்சிலர்.

• லெப்டினன்ட் ஜெனரல் தோமஸ் சுஸ்லி / பெனடிக்ட் ரூஸ் (Lt. Gen. Thomas Süssli / Benedict Roos) – சுவிஸ் இராணுவத் தளபதி.

இச்சந்திப்பின் போது, தற்போதைய உலகளாவிய பாதுகாப்புக் கொள்கை சவால்கள், எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் சுவிஸ் இராணுவத்தின் தயார்நிலை மற்றும் அதில் மருத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்து விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஈழத்தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சுவிஸ் நாட்டின் கொள்கை வகுப்பு ரீதியான இத்தகைய உயர்மட்டச் சந்திப்பில் ஒரு பிரதிநிதியாகக் கலந்துகொண்டமை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகக் கருதப்படுகிறது.”

சுவிற்சர்லாந்து போன்ற ஒரு நாட்டின் இராணுவக் கட்டமைப்பில், ஈழத்தமிழர் ஒருவர் இத்தகைய முக்கியப் பொறுப்பை வகிப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் திறமைக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த ஒரு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply