சுவிஸ் போதகரை காப்பாற்றியது சிறீலங்கா காவல்த்துறைதான்!

You are currently viewing சுவிஸ் போதகரை காப்பாற்றியது சிறீலங்கா காவல்த்துறைதான்!

சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்துக்கு அனுமதித்து காவல்த்தறையினரே காப்பாற்றியுள்ளனர் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களை சந்தித்த அவர், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது காவல்த்தறையினரே. மேலும் காவல்த்தறையினர் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை அச்சுறுத்தியமை தொடர்பாகவும் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். இதனடிப்படையில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள