சுவிஸ் போதகர் மூலமாக யாழில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது!

சுவிஸ் போதகர் மூலமாக யாழில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது!

யாழில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 பேருக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவில் இது தெரிய வந்தது.

யாழில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

சுவிஸிலிருந்து வந்த போதகர் சற்குணராஜாவுடன் நெருக்கமாக இருந்த 20 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் முதலாவது பத்து பேருக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் தொற்றிற்குள்ளாகியிருந்தமை தெரிய வந்தது. மிகுதி 10 பேருக்கும் நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதில் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது.

ஏற்கனவே கட்டட ஒப்பந்தக்காரர் ஒருவரும் பாதிக்கப்பட்டிருந்தார். இதனடிப்படையில் சுவிஸ் போதகர் மூலமாக யாழில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் தாய், மகன் மற்றும் பிறிதொரு சிறுமி ஆகியோர் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments