சுவீடனின் “நேட்டோ” கனவு! சொல்லியடிக்கும் துருக்கி!!

You are currently viewing சுவீடனின் “நேட்டோ” கனவு! சொல்லியடிக்கும் துருக்கி!!

ரஷ்யாவை சுற்றியுள்ள நாடுகளை “நேட்டோ” கூட்டமைப்பில் இணைக்கும் வேலைத்திட்டத்தில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளையும் இணைத்துக்கொள்வதில் சுவீடன் தொடர்பில் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன. “நேட்டோ” கூட்டமைப்பின் விதிகளின்படி, கூட்டமைப்பில் புதிய நாடுகளை இணைத்துக்கொள்வதானால், ஏற்கெனவே கூட்டமைப்பில் அங்கத்துவம் கொண்டுள்ள நாடுகள் அனைத்தும் ஒத்துக்கொள்ளும் பட்சத்திலேயே புதிய நாடுகள் உள்வாங்கப்பட முடியும் என்பது முக்கியமானது.

இந்நிலையில், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் “நேட்டோ”வில் இனைய வேண்டுமானால், இவ்விரு நாடுகளும் அடைக்கலம் கொடுத்து வைத்துள்ள குர்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் தன்னிடம் ஒப்படைத்தால் மட்டுமே, இவ்விரு நாடுகளும் “நேட்டோ”வில் இணைவதற்கான அனுமதியை தன்னால் வழங்க முடியுமென “நேட்டோ” அங்கத்துவ நாடான துருக்கி முன்னதாக உறுதியாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், சுவீடனில் தஞ்சமடைந்திருந்த குர்திய விடுதலை செயற்பாட்டாளர் ஒருவர் சுவீடானால் துருக்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், சுவீடனும், பின்லாந்தும் “நேட்டோ”வில் இணைந்துகொள்வதற்கான விண்ணப்பங்களை முன்வைத்திருந்தன.

எனினும், துருக்கி தனது முடிவில் தொடர்ச்சியாக உறுதியாகவே நின்று வந்திருந்த நிலையில், அண்மையில் சுவீடன் தலைநகரில் உள்ள துருக்கிய தூதரகத்தின் முன்னால் வைத்து இஸ்லாமியர்களின் வேதநூலான “குர் – ஆன்” தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில், துருக்கிய தலைநகரிலுள்ள சுவீடன் தூதரகத்துக்கு முன்னால் வைத்து, சுவீடனின் தேசியக்கொடி தீயிட்டு கொளுத்தப்பட்டமையால் சுவீடன் – துருக்கி இடையிலான முறுகல்நிலை மேலும் இறுக்கமடைந்துள்ளது.

இந்நிலையில், “நேட்டோ” கூட்டமைப்பில் இணையும் சுவீடனில் கனவை சுவீடன் மறக்க வேண்டியதுதான் என துருக்கிய அதிபர் “Edrogan” தெரிவித்துள்ளமை, “நேட்டோ” நாடுகளிடையேயும், அமெரிக்காவிலும் பேசு பொருளாகியுள்ளது. “நேட்டோ”வில் அங்கத்துவ நாடாக துருக்கி இருந்தாலும், அமெரிக்க போர்விமானமான “F – 35” இரக விமானங்களை துருக்கிக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்கா இன்னமும் இணங்காத நிலையில், இவ்வாறான தனது தேவைகளை அமெரிக்கா மற்றும் “நேட்டோ” நாடுகளிடமிருந்து நிறைவேற்றிக்கொள்வதற்காக துருக்கி இவ்விடயத்தை பகடைக்காயாக பயன்படுத்துகிறதா எனவும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments