செஞ்சோலையில் சுடர் ஏற்றிய முன்னணியினர்!

செஞ்சோலையில் சுடர் ஏற்றிய முன்னணியினர்!

முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகம் மீது சிறீலங்கா விமானப்படையினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் உணர்வாளர்களால் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் விஜயகுமார் தலைமையிலான உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள