செத்தவீட்டு அரசியல் வேண்டாம்!டக்கிளசுக்கு கடும் கண்டனம்

செத்தவீட்டு அரசியல் வேண்டாம்!டக்கிளசுக்கு கடும் கண்டனம்

இந்திய மீனவர்களிற்கு எதிராக டக்ளஸ் தேவானந்தா தூண்டலில் அவரது ஆதரவு மீனவ அமைப்புக்கள் போராட்ட அழைப்புவிடுத்துள்ளன.

இன்றைய தினம் வடமராட்சி மீனவ சமாசத்தில் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு மீனவ சங்கத்தை சேர்ந்த நபர்கள் இந்திய மீனவர்களிற்கு எதிராக போராட மாணவ தரப்புக்கள் உள்ளிட்டவர்களை அழைத்துள்ளனர்.

எனினும் இதனை முற்றாக இதனை மறுதலித்து நிராகரித்துள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் தொப்புள் கொடி உறவுகள் நால்வர் கொல்லப்பட்டுள்ள நிலையில் செத்தவீட்டு அரசியலை எங்களிடம் செய்யவேண்டாமென எச்சரித்துள்ளனர்.

மீனவர்களது அத்துமீறல் இருநாட்டு அரசுகளாலும் பேசி தீரக்கவேண்டும்.

புதுடெல்லியோ கொழும்போ இதனை கண்டுகொள்ளாது தமிழ் மீனவர்களது உயிர்களை பணயம் வைத்து அரசியல் சித்துவிளையாட்டை செய்வதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

இதனிடையே வடமாகாண சுதந்திர மீனவ இயக்கமும் வடமராட்சி கிழக்கு மீனவ சங்கமும் தொப்புள் கொடி உறவுகளது மரணத்தில் அரசியல் வேண்டாமெனவும் எச்சரித்துள்ளனர்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments