சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், 191 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு!

  • Post author:
You are currently viewing சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், 191 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 25,937-ஆக அதிகரித்துள்ளது. இதில், 12,507 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 258 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 70.4 விழுக்காடு ஆகும். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 68 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 24 பேரும், ராயபுரம் மருத்துவமனையில் 70 பேரும், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 29 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி மருத்துவமனைகளில் தனிமை அறைகளில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது

பகிர்ந்துகொள்ள