சென்னையில் கொரோனா ; இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா ; இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 5 பேர் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டத்திலும் இன்று புதிதாக 16 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த 52 வயதுடைய நபரும், திருவள்ளூவரை சேர்ந்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதே போல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த 70 வயது பெண்ணும், 47 வயது ஆணும் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.

மேலும், திருவொற்றியூரை சேர்ந்த 71 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, ராயபுரம் பகுதிக்குட்பட்ட காக்கா தோப்பு தெருவில் 45 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திலும் இன்று புதிதாக 16 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசியில், தஞ்சை நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments