சென்னையில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை!

  • Post author:
You are currently viewing சென்னையில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை!

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகளில் கொரோனா வேகமாக பரவும் எனவும், விரைவில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில், “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் 40.70 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், சென்னையில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள