செம்மணியில் இன்று 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

You are currently viewing செம்மணியில் இன்று 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்!

செம்மணியில் இன்றையதினம்(04.08.2026) 43ஆம் நாள் அகழ்வு பணியின் போது, 04 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 97 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 483 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 481 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply