செம்மணியில் புதைக்கப்பட்டோருக்காக நீதி வேண்டி டொரோண்டோவில் போராட்டம்!!

You are currently viewing செம்மணியில் புதைக்கப்பட்டோருக்காக நீதி வேண்டி டொரோண்டோவில்  போராட்டம்!!

*செம்மணியில் புதைக்கப்பட்டோருக்காக நீதி வேண்டி டொரோண்டோவில் கவன ஈர்ப்புப் போராட்டம்.*

கனடிய மண்ணில் யூலை 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு டன்டாஸ் சதுக்கத்தில் (Dundas Square) மாபெரும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டனப் பேரணி நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

செம்மணியில் புதைக்கப்பட்டோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இடம்பெறும் தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டியும் மற்றும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் *மாபெரும் கண்டன மற்றும் கவனஈர்ப்பு* போராட்டம் இடம்பெற உள்ளது.

*Where: Dundas Square (Yonge Street & Dundas Street)*
*When: Sunday July 6th, 2025 @ 3:00 PM*

தமிழராக ஒன்றிணைந்து, கலந்து கொண்டு வரலாற்றுக் கடமையை ஆற்றுவோம். மக்களே அணிதிரண்டு வாருங்கள்.

*மேலதிக தொடர்புகளுக்கு: +1.647.914.2178*
*கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம்*

பகிர்ந்துகொள்ள

Leave a Reply