செம்மணியில் 499 எலும்புக் கூடுகள்!

You are currently viewing செம்மணியில் 499 எலும்புக் கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 45ஆவது நாளான நேற்று 8 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 5 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதன் போது, நாணயக் குற்றி ஒன்றும் சிறுவர்களின் ஆடைகளுக்குரிய பொத்தான்களும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், செம்மணிப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் 99 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 499 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றுள் 494 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply