யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் நேற்று மீள ஆரம்பமாகின. இரண்டாம் கட்ட அகழ்வில் 16 ஆம் நாள் அகழ்வுப் பணி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்களது மேற்பார்வையில் இடம்பெற்றது.
இந்த அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் நேற்ற முதல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
ஆகமொத்தத்தில் கொன்றவரே விசாரணை செய்யும் கொடுமையாக இருக்கின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.






