செம்மணி மனித புதைகுழி – இதுவரை 27 எலும்புக்கூடுகள் மீட்பு!!

You are currently viewing செம்மணி மனித புதைகுழி – இதுவரை 27 எலும்புக்கூடுகள் மீட்பு!!

செம்மணி  மனித புதைகுழியில் இதுவரையில் 27 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணி இன்று(28)  மேற்கொள்ளப்பட்டது.

அதில்  மூன்று மனித ஓட்டுத் தொகுதிகள்  புதிதாக அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செம்மணி மனித புதைகுழியின்  முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில்  இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள்  கடந்த  (26) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியில் கைக்குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.  அதனைத் தொடர்ந்து   நேற்று  (27) இரண்டாம் கட்ட இரண்டாவது நாள் அகழ்வுப் பணியில்  இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply