செயல் திறம் மிகுந்தவர்களுக்கு தமது அமைச்சரவையில் வாய்ப்பளிக்க இருப்பதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர்!

You are currently viewing செயல் திறம் மிகுந்தவர்களுக்கு தமது அமைச்சரவையில் வாய்ப்பளிக்க இருப்பதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர்!

தற்போதைய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள செயல் திறம் மிகுந்தவர்களுக்கு தமது அமைச்சரவையில் வாய்ப்பளிக்க இருப்பதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்துள்ளார். அந்தவகையில் பிரதமர் ரிஷி சுனக்கின் புதிய அணியில் யார் யார் என்ற பட்டியல் கசிந்துள்ளது. நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட் தொடர்வார் என்றே கூறப்படுகிறது. ஆனால் அமைச்சரவையில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்றே கூறுகின்றனர்.

இதனால், போரிஸ் ஜோன்சன் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளித்து, கட்சியின் ஒருமித்த ஆதரவைப் பெற ரிஷி முயற்சிப்பார். இருப்பினும், ஜேக்கப் ரீஸ்-மோக், வெண்டி மோர்டன் மற்றும் ரணில் ஜெயவர்தன ஆகியோர் பதவிகளை இழக்க நேரிடும்.

மட்டுமின்றி, தமது ஆதரவாளர்களான டொமினிக் ராப், சஜித் ஜாவித், மெல் ஸ்ட்ரைட் மற்றும் ஜான் க்ளென் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும். ஆனால் பென் வாலஸ் தமது பாதுகாப்பு அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றே கூறப்படுகிறது.

போரிஸ் ஆதரவாளரான பென் வாலஸ் தமது முழு ஆதரவையும் ரிஷிக்கு அளிப்பதாக கூறியிருந்தும், வாய்ப்பு மறுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. லிஸ் ட்ரஸ் தமது ஆதரவாளர்களுக்கு மட்டுமே அமைச்சரவையில் வாய்ப்பளித்த நிலையில், ரிஷி தமது கட்சியில் செயல் திறம் மிகுந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்பொருட்டு, இரவு வெகு நேரம் வரையில் தமது ஆலோசகர்களுடன் தீவிர கலந்தாலோசனையில் ரிஷி சுனக் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் போட்டியில் தம்முடன் இருந்த இன்னொரு வேட்பாளரான பென்னி மோர்டான்ட் முக்கிய பொறுப்புக்கு கொண்டுவரப்படலாம். அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக், சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments