செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்!

செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்!

சில இளம் பெண்கள் வளர்ப்பு பிராணிகளை வைத்து அதனுடன் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் பதிவேற்றம் செய்வார்கள். செல்ல பிராணிகளுடன் செல்பி எடுக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அர்ஜென்டினாவில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லாரா சன்சோன் அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா? எனக்கு  தெரியவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Lukk meny
error: உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகின்றது!!