வெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட மன்னார் பூமலர்ந்தான் கிராமத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கான,அவசரகால உதவியாக நோர்வே தமிழ்முரசம் வானொலி முன்னெடுக்கும் மனிதாபிமானப் பணிக்கூடாக நோர்வே செவ்வானம் விளையாட்டுக்கழகத்தின் மனிதாபிமானப்பணிக்கான நிதிப்பங்களிப்பில் அரிசி, மா,பருப்பு,சோயா, சீனி,தேயிலை, பிஸ்கற், பனடோல் ஆகியவை அடங்கிய உணவுப் பொதியுடன் சிறுவர்களுக்கான பால்மா, பெட்சீற், நுளம்புவலை,பெண்களுக்கான அத்தியாவசிய ஆடைகள் என்பனவும் வழங்கப்பட்டது.
நோர்வே செவ்வானம் விளையாட்டுக்கழகத்தினருக்கு மன்னார் மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.








