சொகுசு பேருந்து கோரவிபத்து 18 பேர் படுகாயம்!

சொகுசு பேருந்து கோரவிபத்து  18 பேர் படுகாயம்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்த சொகுசு பேருந்து வவுனியா ஓமந்தை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. எதிரில் வந்த பாரஊர்தியுடன் விபத்தை தடுப்பதற்கு முற்பட்டபோதே இவ் விபத்து ஏற்பட்டதாக பேரூந்தின் நடத்துனர் தெரிவித்தார்.

இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments