ஜனவரி 3 முதல் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது.

You are currently viewing ஜனவரி 3 முதல் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது.

Omicron மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது. ஜனவரி 3 முதல், Work From Home கட்டாயமாக்கப்படும், மேலும் பொதுக் கூட்டங்களில் உள்ளரங்க நிகழ்வுகளுக்கு 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும். பிரான்சில் சனிக்கிழமையன்று 100,000-க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகளை பதிவு செய்யப்பட்டதால் இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்க்கப்பட்டுள்ளன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பிரான்சில் முதல் முறையாக இந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

ஆனால், புத்தாண்டை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதை பிரதமர் Jean Castex நிறுத்திவிட்டார்.

அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு செய்தி மாநாட்டில் புதிய நடவடிக்கைகளை வெளியிட்ட Jean Castex, ​​​​இந்த தொற்றுநோய் “முடிவு இல்லாத படம் போல்” உணர்ந்ததாக செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் இரட்டிப்பாகி வருவதாக சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் (Olivier Véran) கூறினார். மேலும் புதிய தொற்றுகள் “மெகா அலை” பற்றி எச்சரித்தார்.

புதிய விதிகளில் வெளிப்புற பொதுக் கூட்டங்களுக்கான வரம்புகளும் அடங்கும். அதன்படி வெளிப்புற பொதுக் கூட்டங்களில் அதிகபட்சம் 5,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அதேபோல், நீண்ட தூர போக்குவரத்துகளில் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டும்.

மறு அறிவிப்பு வரும் வரை இரவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் கஃபேக்கள் மற்றும் பார்கள் டேபிள் சேவையை மட்டுமே வழங்க முடியும்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது Work From Home செய்ய வேண்டும். மாஸ்க் அணிவது நகர மையங்களில் கட்டாயமாக்கப்படும்.

பூஸ்டர் ஷாட்களுக்கு இடையேயான நேரத்தை நான்கு மாதங்களிலிருந்து மூன்று மாதங்களாக அரசாங்கம் குறைத்து வருகிறது.

பிரான்சின் திட்டமிடப்பட்ட தடுப்பூசி பாஸ் – ஒரு வரைவு மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால், ஜனவரி 15 முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, பொது இடங்களில் நுழைவதற்கு, எதிர்மறையான சோதனை முடிவுகள் மட்டுமல்லாமல் தடுப்பூசிக்கான ஆதாரமும் தேவைப்படும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments