ஜனாதிபதி ரணிலை திடீரெனச் சந்தித்த மஹிந்த! – கொழும்பு அரசியலில் பரபரப்பு!

You are currently viewing ஜனாதிபதி ரணிலை திடீரெனச் சந்தித்த மஹிந்த! – கொழும்பு அரசியலில் பரபரப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று திடீர் சந்திப்பு இடம்பெற்றது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது .

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையே தொலைபேசி வாயிலாக கலந்துரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று மஹிந்த ராஜபக்ச அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்துள்ளமையானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments